Haryana polls | ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சைனி லட்வா தொகுதியில் போட்டியிடுகிறார்.
Haryana polls | ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சைனி லட்வா தொகுதியில் போட்டியிடுகிறார்.
Published on: September 5, 2024 at 12:53 pm
Haryana polls | பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 67 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை புதன்கிழமை (செப்.4) வெளியிட்டது.
மாநிலத்தின் முதல் அமைச்சர் நயாப் சிங் சைனி லட்வா சட்டமன்றத் தொகுதியில் களம் காண்கிறார். அதேபோல், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் விஜ் அம்பாலா கான்ட் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
முன்னதாக, ஜனநாயக் ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 19 கட்சிகளின் முதல் பட்டியலை வெளியிட்டது. முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா உச்சன கலான் தொகுதியில் நிறுத்தப்பட்டடுள்ளார். இவர் இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ ஆவார்.
பட்டியலில் 15 வேட்பாளர்கள் ஜேஜேபியை சேர்ந்தவர்கள், நான்கு பேர் சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான ஏஎஸ்பி கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும், ஜேஜேபி துஷ்யந்தின் சகோதரரும் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் சவுதாலாவை டப்வாலி தொகுதியில் நிறுத்தியுள்ளது.
முன்னதாக அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை ஒத்திவைக்க பாஜக, இந்திய தேசிய லோக்தளம் (ஐஎன்எல்டி) மற்றும் அகில இந்திய பிஷ்னோய் மகாசபா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து தேர்தல் ஆணையம் அறிவித்த புதிய அட்டவணையின்படி, அரியானா அக்டோபர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹரியானா சட்டமன்ற தேர்தல்; 10 சீட்கள் கேட்கும் கெஜ்ரிவால்: 7க்கு ஒகே சொல்லும் காங்கிரஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com