சபரிமலை சீசனையொட்டி பெங்களூரு-நிலக்கல் இடையே அரசு பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை சீசனையொட்டி பெங்களூரு-நிலக்கல் இடையே அரசு பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Published on: November 15, 2024 at 12:10 pm
Updated on: November 15, 2024 at 12:12 pm
Sabarimala | சபரிமலையில் கார்த்திகை மாதம் மண்டல மகர விளக்கு பூஜை 41 நாட்கள் நடைபெறும். இந்த பூஜைக்காக கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வசதியாக தங்குவதற்கும், பணத்திற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களூரு-நிலக்கல் இடையே அரசு பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சபரிமலை சீசனையொட்டி பக்தர்களின் வசதிக்காக கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் பெங்களூரு-நிலக்கல் (பம்பை-சபரிமலை) இடையே ‘வால்வோ’ அரசு பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி முதல் தினமும் மதியம் 1.50 மணிக்கு வால்வோ அரசு பஸ் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு நிலக்கல்லை சென்றடையும்.
மறுமார்க்கமாக நிலக்கல்லில் இருந்து வருகிற 29-ந்தேதி மாலை 6 மணிக்கு வால்வோ அரசு பஸ் புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தை வந்தடையும். இந்த வால்வோ பஸ்சில் டிக்கெட் டிக்கெட் கட்டணமாக ரூ.1,750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க மண்டல மகர விளக்கு பூஜை; சபரிமலை நடை மாலை திறப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com