Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு பின்னர், பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததா என ஃபரூக் அப்துல்லா கேள்வியெழுப்பி உள்ளார்.
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு பின்னர், பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததா என ஃபரூக் அப்துல்லா கேள்வியெழுப்பி உள்ளார்.
Published on: September 8, 2024 at 11:39 am
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜம்முவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீரை 3 குடும்பங்கள் சூறையாடின” என தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ், மெகபூபா முஃப்தி ஆகியோரை விமர்சித்தார்.
மேலும், “இவர்கள் மூவரும் கல்லெறியும் நபர்களை ஊக்குவிக்க விரும்புகின்றனர். ஆனால் பாரதிய ஜனதா ஜம்மு காஷ்மீரில் நீண்ட வளர்ச்சி மற்றும் அமைதியை விரும்புகிறது” என்றார்.
ஃபரூக் அப்துல்லா பேட்டி
இந்த நிலையில் ஸ்ரீநகரில் இதற்குப் பதிலளித்த பரூக் அப்துல்லா, “தேசிய மாநாடு கட்சியை கண்டு அவர்கள் (பாஜக) பயப்படுகிறார்கள். தேசிய மாநாடு கட்சியை இழிவுபடுத்த முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.
ஆனால் நாங்கள் வெற்றி பெற்று மக்களின் தலைவிதியை மாற்றுவோம். அவர்கள் உருவாக்க விரும்பும் இந்தியாவை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை நான் அவரிடம் (அமித் ஷா) சொல்ல விரும்புகிறேன்.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரை சூறையாடிய 3 குடும்பங்கள்: அமித் ஷா கடும் தாக்கு!
இஸ்லாமியர்கள் உயிர் தியாகம்
இந்தியா இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் பிறர் அனைவருக்கும் சொந்தமானது.
முஸ்லிம்கள் மீது கேள்வி எழுப்புபவர்கள், சுதந்திரத்திற்காக முஸ்லிம்களும் பங்களித்து உயிர் தியாகம் செய்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் (பாஜக) இந்துக்களை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறார்கள், ஆனால் இப்போது அந்த இந்துக்கள் அதே இந்துக்கள் அல்ல என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
சடடப்பிரிவு 370 நீக்கம்
தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பயங்கரவாதம் தொடங்கும் என்கிறார்கள். 370வது சட்டப்பிரிவை எப்போது ஒழித்தார்கள், பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததா?… தேசிய மாநாட்டும் காங்கிரஸும் நமது மாநில அந்தஸ்தை திரும்பப் பெறுவதை உறுதி செய்யும் என்று அவர்களிடம் கூறுகிறேன்” என்றார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com