உத்தரப் பிரதேசம்: சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அரசு அதிகாரிகளின் சம்பளம் நிறுத்தம்?

உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Published on: September 4, 2024 at 10:17 am

Uttar Pradesh Yogi Adityanath | உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்திரபிரதேச அரசு ஊழியர்கள் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் விவரங்களைச் சமர்பிப்பதற்கான காலக்கெடுவை செவ்வாய்க்கிழமை (செப்.3, 2024) ஒரு மாதம் நீட்டித்துள்ளது.

இது குறித்து, உத்தரபிரதேசத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையின் இயக்குனர் ஷிசர், “அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 74% பேர் தங்கள் விவரங்களை அளித்துள்ளனர்” என்றார்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு, 2023-24 நிதியாண்டுக்கான அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதை கட்டாயமாக்கியுள்ளது.

இதையும் படிங்க : ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடம் இருந்து சம்பளம்: செபி தலைவர் மீது காங்கிரஸ் புதிய புகார்

இதற்கிடையில், உத்திரபிரதேச தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங், இதுவரை தங்கள் சொத்துக்களை வெளியிடாதவர்களின் சம்பளம் நிறுத்தப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
இது குறித்து அவர், “புதிதாக வழங்கப்பட்ட காலக்கெடுவின் கீழ் பல்வேறு துறைகள் தங்கள் சொத்து அறிவிப்புகளை சமர்ப்பிக்க அனுமதிக்கும் வகையில் மிகவும் மென்மையான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக அரசு அதிகாரிகள் ஆக.31க்குள் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்ப்டிருந்தது. இந்த நிலையில், 2.44 லட்சம் ஊழியர்கள் இன்னமும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com