Reliance Group assets freezes : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய ₹3,000 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள 40க்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
Reliance Group assets freezes : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய ₹3,000 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள 40க்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Published on: November 3, 2025 at 9:02 pm
புதுடெல்லி, நவ.3, 2025: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய ₹3,000 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள 40க்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத்துறை (Enforcement Directorate) இன்று (திங்கள்கிழமை) முடக்கியுள்ளது. இந்தச் சொத்துகள் டெல்லி, நோய்டா, காசியாபாத், மும்பை, புனே, தானே, ஹைதராபாத், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கிழக்கு கோதாவரி ஆகிய இடங்களில் பரவியுள்ளன.
அனில் அம்பானி மற்றும் அவரது குழும நிறுவனங்கள் மீது உள்ள கடன் மோசடி குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையின் ஒரு பகுதியாக, இந்த 40 சொத்துகள் தற்காலிகமாக அமலாக்கத் துறையால் இணைக்கப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை கடந்த மாதம் சட்டவிரோத பண தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில், அலுவலக வளாகங்கள், குடியிருப்பு யூனிட்கள் மற்றும் நிலப்பகுதிகள் உள்ளிட்ட சொத்துகளை இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் 35 பேர் கைது.. நடுக்கடலில் பரபரப்பு.. அடுத்து என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com