Congress | Rahul Gandhi | கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அமெரிக்காவில் ராகுல் காந்தியை சந்தித்தப் பேசினார்.
![பிப். 06, 2025 இன்றைய ராசிபலன்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/zodiac-1-qw5helk663k5ovmwt6p387vht1fvs8apgj3xrb7n9k.jpg)
February 6, 2025
Congress | Rahul Gandhi | கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அமெரிக்காவில் ராகுல் காந்தியை சந்தித்தப் பேசினார்.
Published on: September 10, 2024 at 11:52 pm
Congress | Rahul Gandhi | கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அமெரிக்கா சென்றுள்ளார். அதேபோல் ராகுல் காந்தியும் அமெரிக்காவில் உள்ளார். இந்த நிலையில் இருவரும் இன்று (செப்.10, 2024) சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பின்போது டி.கே. சிவக்குமாரின் மனைவி உஷா சிவக்குமாரும் உடனிருந்தார்.
இந்தச் சந்திப்பானது அமெரிக்காவின் வாஷிங்டன்னில் நடந்தது. சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பன குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினும் அமெரிக்காவுக்கு 17 நாள்கள் முதலீடு ஈர்ப்பு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் பட்டியலின மக்களுக்கு ரூ.100ல் ரூ.5தான் கிடைக்கிறது. பழங்குடி மக்களுக்கு 10 பைசாதான் கிடைக்கிறது” என்றார்.
மேலும், “இந்தியாவின் தொழிலதிபர்களான அம்பானி, அதானி பெரும் வளர்ச்சி பெற்றுவருகின்றனர்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இடஒதுக்கீட்டை ரத்து செய்ய யோசிப்போம்.. ஆனால்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com