Devendra Fadnavis: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் தோல்விகளால் விரக்தியில் உள்ளார். இதன் வெளிப்பாடுதான் தேர்தல் ஆணையம் மீதான அவரின் விமர்சனம் என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.
Devendra Fadnavis: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் தோல்விகளால் விரக்தியில் உள்ளார். இதன் வெளிப்பாடுதான் தேர்தல் ஆணையம் மீதான அவரின் விமர்சனம் என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.
Published on: April 21, 2025 at 10:56 pm
மும்பை, ஏப்.21 2025: அமெரிக்காவின் பாஸ்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையம் சமரசம் செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சர்வதேச தளங்களில் இந்தியாவின் ஜனநாயக பிம்பத்தை கெடுத்துவிட்டதாக திங்கள்கிழமை (ஏப்.21 2025) குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “ராகுல் காந்தி வெளிநாடு சென்று இந்த நாட்டின் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் குறித்து பொய்களைப் பரப்பி வருகிறார். மேலும், அதன் மீது அவதூறு பரப்ப முயற்சிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
இதையும் படிங்க முர்ஷிதாபாத் செல்லாதது ஏன்? இந்துக்கள் மீது வெறுப்பா? மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.க கேள்வி
ஜனநாயகம் குறித்து அவர் கேள்விகளை எழுப்ப முயற்சிக்கிறார். தேர்தல்களில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விளைவுகளால் அவர் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
மேலும், “ராகுல் காந்தி நடந்து கொள்ளும் விதம் அவரது குணாதிசயத்தில் ஒரு கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. இதுபோன்ற செயல்களைச் செய்வதற்குப் பதிலாக, அவர் மக்கள் மத்தியில் சென்று மக்களின் நம்பிக்கையை பெற முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்து, அவர் மீண்டும் பெற்றால், அவர் தேர்தலில் வெற்றி பெற முடியும். யாரையும் அவதூறு பரப்பி தேர்தலில் வெற்றி பெற முடியாது” என்றார்.
இதையும் படிங்க கைகோர்க்கும் ராஜ்- உத்தவ் தாக்கரே; பட்னாவிஸ் பதில் என்ன? பரபரக்கும் மகாராஷ்டிரா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com