டெல்லியில் இந்த சீசனில் குளிர்ந்த இரவு இன்று பதிவாகி உள்ளது. 10.2 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
டெல்லியில் இந்த சீசனில் குளிர்ந்த இரவு இன்று பதிவாகி உள்ளது. 10.2 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
Published on: November 21, 2024 at 11:36 pm
Updated on: November 21, 2024 at 11:37 pm
New Delhi | டெல்லியில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.21, 2024) இரவில் 10.2 டிகிரி செல்சியஸ் குளிர் கால நிலை பதிவாகியுள்ளது. முன்னதாக, புதன் அன்று இரவு நேர வெப்பநிலை 11.2 டிகிரி செல்சியஸ் ஆகவும், செவ்வாய் இரவு 12.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்பட்டது.
“இதுவரையிலான பருவத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிகக் குறைந்த வெப்பநிலை” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 2023ல் 10.6 டிகிரி செல்சியஸாகவும், 2022ல் 11.5 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில, பகலில் ஈரப்பதம் 80 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை மாறுபடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாளை (நவ.22, 2024) அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் மற்றும் 10 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஒரு கன மீட்டருக்கு சராசரியாக PM 2.5 அளவு 243.3 மைக்ரோகிராம் மற்றும் வாரந்தோறும் மாசுபாடு 19.5 சதவீதம் அதிகரித்து, இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியுள்ளது.
‘ரெஸ்பையர் லிவிங் சயின்சஸ்’ நிறுவனத்தின் ‘காற்றுத் தர பகுப்பாய்வு’ அறிக்கையின்படி, காற்றின் தரம் அடிப்படையில் நகரங்களின் பட்டியலில் 281வது இடத்தில் டெல்லி கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி கிருஷ்ணகுமார் நியமனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com