2024 Farmers protest | விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ஹரியானா பாதுகாப்புப் படையினரால் அமைக்கப்பட்ட பல அடுக்கு தடுப்புகளால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
2024 Farmers protest | விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ஹரியானா பாதுகாப்புப் படையினரால் அமைக்கப்பட்ட பல அடுக்கு தடுப்புகளால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
Published on: December 9, 2024 at 9:11 am
Updated on: December 9, 2024 at 9:34 am
விவசாயிகள் போராட்டம் 2024 | பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் ஹரியானா காவல்துறை நடத்திய கண்ணீர் புகை குண்டு வீச்சில் 8 விவசாயிகள் காயம் அடைந்தனர்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை (டிச.8, 2024) போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ‘டெல்லி சலோ’ அணிவகுப்பை நாள் முழுவதும் நிறுத்தினர்.
இது குறித்து, பஞ்சாபின் விவசாயி தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில், ”கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதலில் குறைந்தது எட்டு விவசாயிகள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு (PGIMER) அழைத்துச் செல்லப்பட்டார்” என்றார்.
மேலும், “இன்று (அதாவது டிச.8, 2024) 101 விவசாயிகள் கொண்ட ஜாதாவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இன்றும் போராட்டம் தொடரும். ஒரு விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர், ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும், 8-9 விவசாயிகள் காயமடைந்துள்ளனர். எனவே நாங்கள் ‘ஜாதா’வை வாபஸ் பெற்றுள்ளோம். கூட்டத்திற்குப் பிறகு, எதிர்காலத் திட்டத்தைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்” என்றார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com