உச்ச நீதிமன்றம்: 2014 ஆம் ஆண்டு 23 வயது தொழில்நுட்ப வல்லுநர் எஸ்தர் அனுஹ்யாவை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டார். இந்த வழக்கில், சந்திரபான் சுதம் சனாப் என்பவருக்கு நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் வழக்கில் இருந்து சந்திரபான் சுதம் சனாப் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை, நீதிபதிகள் பி.ஆர் கவாய், பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் கே.வி விஸ்வநாதன் ஆகியோர் விசாரித்தனர்.
இந்த வழக்கில் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில், மேல்முறையீட்டாளர் குற்றமற்றவர் என்று நாங்கள் நம்புகிறோம். மேல்முறையீட்டாளர் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர் குற்றவாளி அல்ல. அவர் விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. முன்னதாக இந்த வழக்கில், 2018 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம், சனப்பின் மரண தண்டனையை உறுதி செய்தது.
அப்போது, இத்தகைய நபர் நிச்சயமாக சமூகத்திற்கு அச்சுறுத்தலாகவே இருப்பார் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் மும்பையின் கோரேகானில் உள்ள டி.சி.எஸ் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்தவர் ஆவார்.
இவர், ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த வழக்கில் சனாப் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. அதன்படி குற்றப்பத்திரிகையில், 23 வயது பெண்ணை குற்றம் சாட்டப்பட்டவர் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை சாலையோரத்தில் வைத்து எரித்துவிட்டதாகவும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கொடூரமாக நடந்துக்கொண்டுள்ளார். இவர் மிகக் கொடூரமான முறையில் குற்றத்தை செய்துள்ளார் எனவும் விசாரணை நீதிபதி கூறி இருந்தார்.
இந்த நிலையில் சனாப் குற்றமற்றவர் என வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் உண்மையான குற்றவாளி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க : மும்பை தாக்குதலில் தொடர்பு: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் தஹாவூர் ராணா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்