“Pushpa 2” OTT Release: புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
“Pushpa 2” OTT Release: புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Published on: January 27, 2025 at 10:43 pm
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா- தி ரைஸ்’. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘புஷ்பா 2 தி ரூல்’கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் முதல் நாளிலேயே ரூ. 294 கோடி வசூல் செய்தது. மேலும், படம் வெளியாகி வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ளது. படத்தின் வசூல் ரூ. 1900 கோடியை கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புஷ்பா-2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. படம் வருகிற ஜனவரி 30 ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com