brain-eating amoeba: அண்டை மாநிலமான கேரளத்தில் மூளையை உண்ணும் அமீபா கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 19 பேர் பலியாகிவிட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
brain-eating amoeba: அண்டை மாநிலமான கேரளத்தில் மூளையை உண்ணும் அமீபா கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 19 பேர் பலியாகிவிட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
Published on: September 18, 2025 at 6:00 pm
Updated on: September 18, 2025 at 6:01 pm
திருவனந்தபுரம், செப்.18, 2025: கேரள மாநிலத்தில், அரிதான நீரினால் பரவும் ‘மூளையை உண்ணும் அமீபா’வால் ஏற்படும் தொற்றுகள் கடந்த ஆண்டை விட இரு மடங்காக அதிகரித்துள்ளன. இதனால், அங்கு செப்டம்பரில் மட்டும் ஒன்பது பேர் உட்பட, இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலத்தை பொருத்தமட்டில் கடந்த ஆண்டு நேக்லீரியா ஃபோலேரி என்னும் அமீபாவால் ஏற்படும் முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் 36 தொற்றுகள் பதிவாகின. இது “மூளையை உண்ணும் அமீபா” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது மூளையைப் பாதித்து மூளை திசுக்களை அழிக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கப் பணிக்குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் மருத்துவர் அல்தாஃப் அலி இது குறித்து கூறுகையில், “எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது, ஆனால் அதிகாரிகள் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சையளிக்க மாநிலம் முழுவதும் பெரிய அளவில் சோதனைகளை நடத்தி வருகின்றனர்” என்றார்.
மேலும், “கடந்த காலங்களில் குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து வேறுபட்டு, இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது” எனவும் அவர் தெரிவித்தார்.
அறிகுறி என்ன?
இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு (WHO) தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தியை இதன் அறிகுறிகளாக பட்டியலிட்டுள்ளது. இது அதிகரித்து வலிப்புத்தாக்கங்கள், மனநிலை மாற்றங்கள், பிரமைகள் மற்றும் கோமா ஆக மாறும் என்றும் அச்சுறுத்தியுள்ளது. 1962 முதல், உலகளவில் கிட்டத்தட்ட 500 பாதிப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன. அவை, பெரும்பாலும் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : SBI Bank Robbery: 58 கிலோ தங்கம்.. ரூ.8 கோடி ரொக்கம்.. கர்நாடகத்தை கலங்கடித்த கொள்ளையர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com