ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
Published on: October 8, 2024 at 7:42 pm
Haryana Election Results 2024 | Congress | ஹரியானா தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் இன்று (அக்.8, 2024) தெரிவித்துள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றும் காங்கிரஸ் எழுதியுள்ளது.
இதற்கிடையில், “பெரும்பாலான வாக்கு எண்ணிக்கை முகாம்களில் செல்வாக்கு செலுத்தும் நடைமுறைகள் நிகழ்கின்றன” எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
The people of J&K have given a clear, decisive mandate to the National Conference and Indian National Congress alliance.
— Congress (@INCIndia) October 8, 2024
The priority of the alliance government will be the restoration of the statehood of J&K.
The alliance government will be responsible, accountable, and… pic.twitter.com/gUd73Yz50x
இது குறித்து ஜெய் ராம் ரமேஷிற்கு அளித்த பதிலில், “பொறுப்பற்ற, ஆதாரமற்ற மற்றும் உறுதிப்படுத்தப்படாத தவறான கதைகளுக்கு மறைமுகமாக நம்பகத்தன்மையை வழங்கும் உங்கள் (திரு ரமேஷின்) முயற்சியை சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரமேஷ், “ஹரியானா முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதவை, முற்றிலும் ஆச்சரியமானவை மற்றும் எதிர் உள்ளுணர்வு கொண்டவை. இது யதார்த்தத்திற்கு எதிரானது.
இது ஹரியானாவில் உள்ள மக்கள் தங்கள் மனதை மாற்றியதற்கும் மாற்றத்துக்கும் எதிரானது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹரியானாவில் இன்று நாம் பார்த்தது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி, மக்களின் விருப்பத்தை சிதைத்ததற்கான வெற்றி மற்றும் இது வெளிப்படையான, ஜனநாயக செயல்முறைகளுக்கு கிடைத்த தோல்வி. ஹரியானா பற்றிய அத்தியாயம் முழுமையடையவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com