Singer Zubeen Garg Death: பாடகர் ஜூபின் கார்க் மரணத்தில் நீதி கோரி காங்கிரஸ் பேரணி நடத்தினார்கள். இதில் மாநில முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டார். ஜூபின் கார்க் மரணத்தில் நீதி கோரப்பட்டது.
Singer Zubeen Garg Death: பாடகர் ஜூபின் கார்க் மரணத்தில் நீதி கோரி காங்கிரஸ் பேரணி நடத்தினார்கள். இதில் மாநில முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டார். ஜூபின் கார்க் மரணத்தில் நீதி கோரப்பட்டது.
Published on: October 3, 2025 at 10:44 pm
சிவசாகர் (அஸ்ஸாம்) அக்.3, 2025: அஸ்ஸாம் மாநிலத்தின் பிரபல பாடகர் ஜூபின் கார்க் மரணத்தில் நீதி கோரி, மாநில காங்கிரஸார் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். இந்தப் பேரணியில் காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகாய் கலந்துகொண்டார். அப்போது அவர் பாடகரின் மரணத்தில் நீதி வேண்டும் என்றார்.
காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகாய் பேட்டி
#WATCH | Sivasagar | Assam Pradesh Congress Committee President and MP Gaurav Gogoi leads the candlelight protest march organised by Sivasagar District Congress Committee, demanding justice for Singer Zubeen Garg, who died in a scuba-diving accident in Singapore.
— ANI (@ANI) October 3, 2025
He says,… pic.twitter.com/iWtlDj6eyt
இதையும் படிங்க: சட்டவிரோத கைது.. சோனம் வாங்சுக் மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
இது தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகாய், “இன்று, நாங்கள் அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில், சாதாரண குடிமக்களுடன் சேர்ந்து தெருக்களில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தி ஜூபீன் கார்க்கின் கொலைக்கு நீதி கோரி வருகிறோம்.
கடந்த சில நாள்களில், அசல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தின் காரணமாக, அவர்களில் சிலர் இந்த நேரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் தங்கள் வழக்கைத் தாக்கல் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர். பல முக்கியமான ஆதாரங்கள் இன்றும் கூட வெளியிடப்படவில்லை” என்றார்.
போராட்டம் தொடரும்
மேலும், “வரும் நாட்களில், ஜூபீன் கார்க்கிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக அஸ்ஸாமின் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேரணிகளை ஏற்பாடு செய்வோம்” என்றார்.
இதையும் படிங்க: அஸ்ஸாம் பாடகர் மரணம்.. மேலாளர், ஈவென்ட் அமைப்பாளர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com