Congress Slams Manipur Governor: சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு மணிப்பூர் ஆளுநர் தாமதம் செய்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
Congress Slams Manipur Governor: சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு மணிப்பூர் ஆளுநர் தாமதம் செய்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on: February 11, 2025 at 4:17 pm
மணிப்பூர் : அரசியலமைப்பின் 174 (1) பிரிவு இரண்டு சட்டமன்றக் கூட்டங்களுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்று கூறுகிறது என்பதை காங்கிரஸ் கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், மணிப்பூர் ஆளுநர் அதன் அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட சட்டமன்றத்தை அழைக்காததன் மூலம் சட்டவிதியை மீறுகிறார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மணிப்பூர் சட்டமன்றக் கூட்டத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக இன்றுதான் கடைசி நாள்.
ஏனெனில், இந்திய அரசியலமைப்பின் 174 (1) பிரிவு, ஒரு சட்டமன்றக் கூட்டத்தின் கடைசி கூட்டத்திற்கும் அடுத்த சட்டமன்றக் கூட்டத்தின் முதல் கூட்டத்திற்கும் இடையே ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது எனத் தெளிவாகக் கூறுகிறது.
இதன்மூலம், மணிப்பூர் சட்டமன்றத்தை அழைக்காததன் மூலம் 174 (1) பிரிவை ஏன் ஆளுநர் மீறுகிறார்.
திங்களன்று காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
#WATCH | On the resignation of Manipur CM N Biren Singh, Congress MP Jairam Ramesh says, "… We were about to bring a no-confidence motion in the Vidhan Sabha, and 14 hours before that, N Biren Singh resigned. There are many prospective CM candidates but BJP cannot decide on a… pic.twitter.com/k7mi2M6B2n
— ANI (@ANI) February 11, 2025
ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பிரேன் சிங் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ள நிலையில் காங்கிரஸ் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளது.
மேலும், மணிப்பூர் முதல்வர் பதவியில் இருந்து சிங் ராஜினாமா செய்தது தாமதமானது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
2023 மே மாதம் மாநிலத்தில் இன வன்முறை வெடித்ததில் தொடர் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. இதில், கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க :மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா.. காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com