Rahul gandhi: வாக்கு திருட்டு என தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ராகுல் காந்தியின் பரப்புரை அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Rahul gandhi: வாக்கு திருட்டு என தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ராகுல் காந்தியின் பரப்புரை அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Published on: August 18, 2025 at 11:31 am
புதுடெல்லி, ஆக.18 2025: பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தம் மீது ராகுல் காந்தி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, வாக்கு திருட்டு என்ற பரப்புரையை முன்னெடுத்து வருகிறார். ராகுல் காந்தியின் இந்தப் பரப்புரைக்கு காங்கிரஸின், ”இந்தியா” கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த நிலையில், ராகுல் காந்தி, பீகாரில் வாக்கு அதிகார யாத்திரையை நடத்திவருகிறார். அப்போது வாக்கு திருட்டு (vote chori) உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்திவருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர், ராகுல் காந்தியின் பரப்புரை இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் எனக் குறிப்பிட்டார். மேலும், அற்ப அரசியலுக்காக தவறான தகவல்களை பரப்புகிறார் என்றும் கூறினார்.
மேலும், வாக்காளர் திருத்தம் எப்படி மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார். இதற்கிடையில், “7 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அரசியலமைப்பு அவமதிப்பு.. ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com