மும்பையில் தாறுமாறாக ஓடிய பேருந்து ஏற்படுத்திய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
மும்பையில் தாறுமாறாக ஓடிய பேருந்து ஏற்படுத்திய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
Published on: December 10, 2024 at 7:25 pm
Updated on: December 10, 2024 at 7:54 pm
Mumbai Bus Accident | மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் நேற்று மாநகர பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இந்த விபத்தில் பேருந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பேருந்து ஓட்டுநர் சஞ்சய் மோர் (50) கைது செய்யப்பட்டார். பேருந்தில் பிரேக் பிடிக்காததாலேயே விபத்து நடந்ததாக டிரைவர் தெரிவித்துள்ளார். ஆனால், விபத்தை நேரில் பார்த்தவர்கள் டிரைவர் போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com