Uttarakhand: 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உத்தகாண்ட் மாநில உள்ளூர் பா.ஜ.க பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
Uttarakhand: 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உத்தகாண்ட் மாநில உள்ளூர் பா.ஜ.க பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
Published on: June 6, 2025 at 11:02 pm
ஹரித்வார், ஜூன் 6 2025: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 13 வயதான சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தையிடம் இது குறித்து தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், 13 வயது சிறுமியின் தாயார் உள்ளூர் பாரதிய ஜனதா பிரமுகரான அனாமிகா சர்மா, அவரது கள்ளக் காதலன் சுமித் பத்வால் மற்றும் உதவியாளர் சுபம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முதலில் சுபம், மீரட் ஷாபூரில் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது உறுதியானது. இதைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் மற்றும் அவரது கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர் என பி.டி.ஐ ஏஜென்சி தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை- பகீர்
அனாமிகா சர்மா தனது கணவரை பிரிந்து வருகிறார். இவரின் 13 வயதான மகள் அனாமிகா கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரை ஆக்ரா, ஹரித்வார் மற்றும் விருந்தாவன் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டிச் சென்று தனது கள்ளக் காதலனுக்கு பாலியல் இரையாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் 2025 மார்ச் மற்றும் ஜனவரி உள்ளிட்ட மாதங்களில் நடைபெற்றுள்ளது.
வழக்குப்பதிவு
இந்த நிலையில், அனாமிகா சர்மா உள்பட 3 பேர் மீதும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாரதிய நியாய சன்ஹிதாவின் (பி.என்.எஸ்) கீழ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை 70(2), குற்ற மிரட்டல் 351 (3), குற்ற செயல் 3 (5) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அனாமிகா சர்மா பாரதிய ஜனதா கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என பா.ஜ.க தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அவர் கடந்த காலங்களில் பா.ஜ.க. கட்சியில் மகளிர் அணியில் செயல்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 15 வயது சிறுமி 2 மாதமாக பாலியல் வன்புணர்வு.. விபசாரத்தில் தள்ளிய கொடுமை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com