Kangana Ranaut: நடிகை கங்கனா ரணாவத் காதி சேலை அணிந்து காணப்பட்டார்.
Kangana Ranaut: நடிகை கங்கனா ரணாவத் காதி சேலை அணிந்து காணப்பட்டார்.
Published on: September 23, 2025 at 4:27 pm
Updated on: September 23, 2025 at 6:20 pm
மாண்டி (HP), செப்.23, 2025: இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத், இன்று (செவ்வாய்க்கிழமை) பி.டி.ஐ.க்கு பேட்டியளித்தார்.
அப்போது, “நாம் சுதேசிப் பொருள்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஜி.எஸ்.டி குறைப்பு திருத்தம்” குறித்தும் பேசினார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய கங்கனா ரணாவத், “ஜி.எஸ்.டி திருத்தம் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். நாடு முழுவதும் உள்ள மக்களை ஊக்குவிக்கும் நோக்கில், இது வந்துள்ளது. நாம் நமது வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத்) என்ற கனவை நனவாக்குவதில் இது ஒரு மைல்கல் படியாக இருக்கும்” என்றார்.
தொடர்ந்து, “ஜி.எஸ்.டி குறைப்பு மூலம், பிரதமர் சுதேசிக்கு முக்கியத்துவம் அளித்தள்ளார். நமது நாட்டின் இளைஞர்களின் கடின உழைப்பால் தயாரிக்கப்படும் பொருட்களை நாம் வாங்க வேண்டும். இதனால் சுதேசி பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்; மேலும், செலவினங்கள் குறையும்” என்றார்.
காதி சேலை
VIDEO | Mandi: BJP MP Kangana Ranaut, speaking on the new Gen GST implemented from today, said, "We are celebrating this as a 'Bachat Utsav' to encourage people across the country. This will be a landmark step in realizing the dream of a developed India (Viksit Bharat). With the… pic.twitter.com/jRQvlRg1h8
— Press Trust of India (@PTI_News) September 22, 2025
(நன்றி பி.டி.ஐ)
இந்நிலையில் தாம் அணிந்திருக்கும் சேலை குறித்து பேசிய கங்கனா ரணாவத், “நான் அணிந்திருக்கும் காதி சேலை நமது நாட்டின் மண்ணின் சாரத்தை உள்ளடக்கியது” என்றார்.
இதையும் படிங்க : நாட்டில் வேலைவாய்ப்பின்மை, ஊழல் அதிகரிப்பு.. ராகுல் காந்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com