Shubhanshu Shukla meets PM Narendra Modi: வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, திங்கள்கிழமை (ஆக.18 2025) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
Shubhanshu Shukla meets PM Narendra Modi: வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, திங்கள்கிழமை (ஆக.18 2025) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
Published on: August 18, 2025 at 9:27 pm
புதுடெல்லி, ஆக.18 2025: வரலாற்று சிறப்புமிக்க ஆக்ஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக, விங் கமாண்டர் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும், ஐ.எஸ்.எஸ்ஸில் காலடி எடுத்து வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் சுக்லா பெற்றார்.
#WATCH | Group Captain Shubhanshu Shukla, who was the pilot of Axiom-4 Space Mission to the International Space Station (ISS), meets Prime Minister Narendra Modi. pic.twitter.com/0uvclu9V2b
— ANI (@ANI) August 18, 2025
இந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, திங்கள்கிழமை (ஆக.18 2025) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள காணொலியில், பகிர்ந்துள்ள காணொளியில், சுக்லா பிரதமருடன் கைகுலுக்கி பின்னர் கட்டிப்பிடிக்கச் செல்வதைக் காணலாம். சுக்லா தனது விண்வெளிப் பயணத்தின் துணுக்குகளை ஒரு டேப்லெட்டில் மோடிக்குக் காட்டும்போது இருவரும் உரையாடலில் ஈடுபட்டதையும் வீடியோ காட்டுகிறது.
மேலும், பயணத்தின் போது சுற்றுப்பாதை ஆய்வகத்தில் எடுக்கப்பட்ட தேசியக் கொடியை இருவரும் ஏந்திச் செல்லும் காட்சிகளும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஆக்சியம்-4 பயணத்தை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடிக்கு சுக்லா ஒரு நினைவுப் பரிசை வழங்குவதையும் காணலாம்.
ஜூலை 15 அன்று தனது 18 நாள் ஐ.எஸ்.எஸ் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, சுக்லா டெக்சாஸின் ஹூஸ்டனில் பூமியின் ஈர்ப்பு விசைக்கு மீண்டும் பழகி வருகிறார்.
டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு
A moment of pride for India! A moment of glory for #ISRO! A moment of gratitude to the dispensation that facilitated this under the leadership of PM @narendramodi.
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) August 16, 2025
India’s Space glory touches the Indian soil… as the iconic son of Mother India, #Gaganyatri Shubhanshu Shukla… pic.twitter.com/0QJsYHpTuS
இந்த நிலையில் டெல்லி வந்த சுபான்ஷஷு சுக்லாவை மத்திய அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் டெல்லி பா.ஜ.க முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிரமாண பத்திரம் or மன்னிப்பு.. ராகுல் காந்திக்கு சிக்கலான ‘வாக்கு திருட்டு’!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com