பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் காயம் ஏற்பட்ட போது, ராகுல் காந்தி முகத்தில் ஆணவம் தெரிந்தது என அனுராக் தாகூர் கூறினார்.
பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் காயம் ஏற்பட்ட போது, ராகுல் காந்தி முகத்தில் ஆணவம் தெரிந்தது என அனுராக் தாகூர் கூறினார்.
Published on: December 20, 2024 at 3:06 pm
Updated on: December 21, 2024 at 9:20 am
Parliament scuffle | பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் மீது தாக்குதல்: பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இன்றும் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “நேற்று காணப்பட்ட ராகுல் காந்தியின் ஆணவமும், சக எம்.பி.க்கள் மீதான அவரது அணுகுமுறையும் மிகவும் வருந்தத்தக்கது. எல்லா விதிகளையும் மீறி, குறிப்பிட்ட பாதையில் செல்லாமல், வேண்டுமென்றே தன் ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு ரகளையை உருவாக்கினார்.
இது, மன்னிக்க முடியாதது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இப்படி நினைத்துக் கொண்டு போகலாமா? காயம்பட்டவர்களிடம் அவரை (ராகுல் காந்தி) அழைத்துச் சென்றபோது, நலம் கேட்க மறந்து, மன்னிப்பு கேட்க மறந்து காணப்பட்டார்.
அவரின் ஆணவம் அவர் முகத்தில் தெரிந்தது. உங்களுக்கு என்ன நடந்தால் என்ன? எங்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற சிந்தனையில் அவர் உள்ளார்” என்றார்.
இதையும் படிங்க:
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com