Amit Shah: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
Amit Shah: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

Published on: December 30, 2025 at 4:00 pm
கொல்கத்தா, டிச.30, 2025: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பாஜக இரண்டு-மூன்றாம் பங்கு பெரும்பான்மையுடன் அரசு அமைக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துப் பேசிய அமித் ஷா, “2016 தேர்தலில் பாஜக 3 இடங்கள் பெற்ற நிலையில், 2021 தேர்தலில் 77 இடங்களைப் பெற்றது. 2019 மக்களவை தேர்தலில் 41% வாக்குகள் மற்றும் 18 இடங்களைப் பெற்றது. 2026 தேர்தல் “ஊடுருவல்காரர்களை நிறுத்துதல் மற்றும் அகற்றுதல்” என்ற பிரச்சினையை மையமாகக் கொண்டு நடைபெறும்.
திரிணாமூல் காங்கிரஸ் அரசு பாதுகாப்பு பிரச்சினையில் தோல்வியடைந்துள்ளது. ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் மாநிலத்தை சீரழித்துவிட்டது” என்றார். இதையடுத்து ஆர்.ஜி கர் மருத்துவமனை மற்றும் கஸ்பா சட்டக் கல்லூரி பாலியல் வன்முறை சம்பவங்களை எடுத்துக்காட்டி, மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : உன்னோவ் பாலியல் வழக்கு; சிறையில் குல்தீப் சிங்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com