Pradhan Mantri Rashtriya Bal Puraskar: கோயமுத்தூர் வியோம பிரியா என்ற 9 வயது சிறுமிக்கு இறப்புக்குப் பின்னர், பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
Pradhan Mantri Rashtriya Bal Puraskar: கோயமுத்தூர் வியோம பிரியா என்ற 9 வயது சிறுமிக்கு இறப்புக்குப் பின்னர், பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

Published on: December 26, 2025 at 11:37 pm
புதுடெல்லி டிசம்பர் 26 2025; நாட்டில் வீர தீர செயல்கள் புரிந்த, குழந்தைகளுக்கு பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இதில் பல்வேறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அவர்களின் வீர தீர செயல்களை பாராட்டும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டன.
வியோம பிரியா
இதில் பெரிதும் கவனம் ஈர்க்கப்பட்டவர் கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்த, வியோம பிரியா என்பவர் ஆவார். 9 வயதான இந்த வீரச்சிறுமி தற்போது நம்மோடு இல்லை.
ஆறு மாத குழந்தை மின்சார தாக்குதலில் பாதிக்கப்பட்ட போது, தனது வயதையும் பொருட்படுத்தாமல் துரிதமாக செயல்பட்டு அக்குகுழந்தையை காப்பாற்றினார்.
இந்த வாழ்வா சாவா போராட்டத்தில் தன் உயிரை இழந்த பிரியா, மக்கள் மனதில் தியாகச் சுடராக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அரசு இவருக்கு இறப்புக்கு பின்னர் பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விருதினை மறைந்த மாணவி பிரியாவின் தாயார் அர்ச்சனா சிவராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க; 24 ஆண்டுகளாக தொடரும் அநீதி? திடீரென சட்டையை கழற்றிய முன்னாள் ராணுவ வீரர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com