இந்திய தொழிலதிபர் அதானையை கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார் கே வலியுறுத்தியுள்ளார்.
இந்திய தொழிலதிபர் அதானையை கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார் கே வலியுறுத்தியுள்ளார்.
Published on: November 22, 2024 at 11:43 pm
Mallikarjuna Kharge | இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளது. அவர் அரசு அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் தனது முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 2100 கோடிகள் வரை செலவழிக்கப்பட்டதாக அமெரிக்கா தனது குற்றச்சாட்டில் கூறியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில் கௌதம் அதானியின் நிறுவன பங்குகள் சுமார் 20 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ” அதானியை கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ” அதானி குறித்து மத்திய அரசுக்கு அனைத்தும் தெரியும்; அதானே கைது செய்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும்” என்றார்.
இதையும் படிங்க ‘அதானியை கைது செய்து விசாரியுங்கள்’: ராகுல் காந்தி அதிரடி.. பா.ஜ.க. பதில் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com