Kerala | கேரளாவில் ஃபேன்சி நம்பர் பிளேட்டுக்கு அதிக விலை கொடுத்து திருவல்லா பெண்மணி புதிய சாதனை படைத்துள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Kerala | கேரளாவில் ஃபேன்சி நம்பர் பிளேட்டுக்கு அதிக விலை கொடுத்து திருவல்லா பெண்மணி புதிய சாதனை படைத்துள்ளார்.
Published on: September 19, 2024 at 7:59 am
Kerala | நடிகர் பிருத்விராஜ் சுகுமாறனின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார் கேரளத்தை சேர்ந்த இளம்பெண் நிரஞ்சனா. இவர், தன்னுடைய காருக்கு விருப்பமான ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்காக ரூ.7.5 லட்சம் செலவு செய்துள்ளார். நடுவத்ரா டிரேடர்ஸின் இயக்குனரான நிரஞ்சனா நடுவத்ரா, திருவல்லா ஆர்.டி.ஓ அலுவலகத்தால் நடத்தப்பட்ட ஏலத்தின் போது, தனது லேண்ட்ரோவர் டிஃபென்டர் ஹெச்எஸ்இக்கு “KL 27 M 7777” என்ற நம்பர் பிளேட்டைப் பெற்றுக் கொண்டார்.
இதன் மூலம், நடிகர் பிருத்விராஜ் சுகுமாறனின் முந்தைய சாதனையை நிரஞ்சனா முறியடித்துள்ளார். அவர் தனக்கு விருப்பமான ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்காக ரூ.7.5 லட்சம் செலவு செய்துள்ளார். நிரஞ்சனா, தனது 1.78 கோடி மதிப்பிலான கார்ப்பத்தியன் கிரே நிறரேஞ்ச் ரோவர் டிபென்டர் ஹெச்எஸ்இ- க்காக இந்த நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார்.
அவரது நிறுவனமான நடுவத்திரா டிரேடர்ஸ், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் உள்ளிட்ட பல ஆவணத் திட்டங்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. மேலும், குவாரிகள், மிளகு மற்றும் தொடர்பான துறைகளில் செயல்படும் ஈர்தெக்ஸ் வெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
தான் விரும்பிய நம்பர் பிளேட்டை பெறவேண்டும் என்பது நிரஞ்சனாவின் கனவாக இருந்துள்ளது. “இதுபோன்ற ஏலங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசாங்கம் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம்” என்றும் அவர் தெரிவித்தார். ஃபேன்சி நம்பர் பிளேட்டுகளை ஏலம் விடுவதன் மூலம் மோட்டார் வாகனத் துறை மூலமாக அரசு கருவூலத்திற்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.
முன்னதாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கே.எஸ்.பாலகோபால் என்பவர் மாநிலத்திலேயே மிகவும் விலையுயர்ந்த ஃபேன்சி நம்பர் பிளேட்டான “கேஎல் 01 சிகே 1″க்கு ரூ.31 லட்சம் செலவு செய்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ஓணம் கொண்டாட்டம்; பள்ளி கழிவறையில் மது குடித்த 7ஆம் வகுப்பு சிறுவர்கள்: 6 பேர் மீது வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com