Tirumala Laddu Row | திருப்பதி லட்டு பிரச்னை விரைவில் முடியும் என பக்தர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.
February 6, 2025
Tirumala Laddu Row | திருப்பதி லட்டு பிரச்னை விரைவில் முடியும் என பக்தர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Published on: September 22, 2024 at 12:08 pm
Tirumala Laddu Row | திருப்பதி வெங்கடாசலப்பதி திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தை யொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த பக்தர் பிரவீன் என்பவர் ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியில், “திருப்பதி வந்துள்ளேன். மிகவும் அற்புதமாக உணர்கிறேன். லட்டு பிரச்னை மனதுக்கு கடினமாக இருந்தது. விரைவில் இந்தச் சர்ச்சை முடியும் என நம்புகிறேன்” என்றார்.
மற்றொரு பக்தர் வெங்கட் சுதாகர், “கலப்படம் உண்மையாக இருந்தால், அது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் குறைந்தபட்சம் தற்போதைய அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், மேலும் வெங்கடேசப் பக்தர்களின் உணர்வுகளையும் கவனிக்க வேண்டும்” என்றார்.
திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள கோவில்களில் அரசின் நந்தினி நெய் மட்டுமே உபயோகிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆவின் நெய் மட்டுமே பயன்படுது்தப்பட்டு வருவதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : திருப்பதி லட்டு சர்ச்சை: 11 நாள் பிராயச்சித்த தீக்ஷையை தொடங்கிய பவன் கல்யாண்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com