Ahmedabad air plane crash: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான கறுப்பு பெட்டி சிக்கியது. இந்த விபத்தில் விசாரணை எதை நோக்கி இருக்கும்?
Ahmedabad air plane crash: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான கறுப்பு பெட்டி சிக்கியது. இந்த விபத்தில் விசாரணை எதை நோக்கி இருக்கும்?
Published on: June 14, 2025 at 7:24 pm
புதுடெல்லி, ஜூன் 14 2025: நேற்று முன்தினம் (ஜூன் 12, 2025) அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 33 வினாடியில் மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த மிகப்பெரிய விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்தார். விஷ்வாஷ் குமார் ரமேஷ் என்ற ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் மாணவர் விடுதி பகுதியில் 33 பேர் உயிரிழந்தனர்.
ஏர் இந்தியா AI 171–இன் விமான விபத்து தொடர்பான கறுப்பு பெட்டி சிக்கியுள்ளது. இந்நிலையில், விசாரணை எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
கருப்பு பெட்டி விசாரணையில் படிகள் (flaps, slats) சரியான நிலையில் இருந்ததா, லேண்டிங் கியர் சரியாக இழுத்துக் கீழிறங்கியதா, ஊடக தொழில்நுட்பங்கள் (எரிபொருள் ஓட்டம், மின்கட்டுப்பாடு, ஹைட்ராலிக் அமைப்புகள்) போன்ற முக்கிய கூறுகள் என AAIB மற்றும் DGCA, NTSB, Boeing, GE போன்றதொழில்நுட்ப குழுக்கள் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும், இயந்திர கட்டுப்பாட்டு அமைப்புகள், எரிபொருள் அளவீடு, படிகள், ஹைட்ராலிக் அமைப்புகள் மற்றும் இயந்திர விவரக்குறிப்புகள் ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை மற்றும் கூடுதல் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது
விபத்தில் உயிரிழந்த பயணிகளின் உடல்கள், DNA மூலம் அடையாளம் காண நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அகமதாபாத் விமான விபத்து கடந்த 30 ஆண்டு காலத்தில் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விபத்து இதுவாகும்.
நிபுணர் குழுக்களின் உதவியோடு கருப்புப் பெட்டிக்களை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு பின் வெளியிடப்படும் முடிவுகள், உலகளாவிய விமான பாதுகாப்பு நிலைகளை மறுபரிசீலிக்க வலிமையான மற்றும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க ஏர் இந்தியா விமான விபத்து; க்ளைம் நடைமுறையை எளிதாக்கிய எல்.ஐ.சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com