Manipur | மணிப்பூரில் இன்று நடந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர்.
Manipur | மணிப்பூரில் இன்று நடந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர்.
Published on: September 7, 2024 at 5:56 pm
Manipur | வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்.7, 2024) நடந்த வன்முறை சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, ஜிரிபாம் மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இரண்டு ஆயுதக் குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
ஜிரிபாம் காவல் நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள நிங்தெம் குனூவில் அதிகாலை 5 மணியளவில் குகி தீவிரவாதிகளால் சந்தேகிக்கப்படும் நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். மணிப்பூரில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இம்பாலின் மேற்கு கிராமங்களில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கச்சா குண்டுகள் வீசப்பட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்த மணிப்பூர் முதலமைச்சர் என் பைரேன் சிங், “இதனை தீவிரவாத செயல் என்று கூறினார். மேலும் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மணிப்பூரில் புதிதாக வன்முறை சம்பவங்கள் நடக்கும் நிலையில் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சொன்னபடி சென்னை வந்த மகா விஷ்ணு: விமான நிலையத்திலே கைது செய்த போலீசார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com