ரூ.600 ஆடு திருட்டு, சிக்கிய 12 பேர்.. 36 ஆண்டுகள் விசாரணை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Bihar | பீகாரில் பரபரப்பை ஏற்படுத்திய ஆடு திருட்டு வழக்கில் 36 ஆண்டுகள் விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Published on: September 10, 2024 at 6:17 pm

Bihar | பீகாரில் நடந்த ஆடு திருட்டு வழக்கில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அவுரங்காபாத் சிவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
1988 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. வழக்கு விவரத்தின்படி, தவுத்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஸ்லெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் ராய் என்பவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.

அப்போது, அவரது வீட்டுக்குள் புகுந்த சுமார் 12 பேர் ரூ.600 மதிப்புள்ள இரண்டு ஆட்டை திருட முயன்றனர். இதைப் பார்த்து வீட்டில் உள்ள நபர்கள் கூச்சலிட்ட நிலையில் ஆட்டை திருடிவிட்டு வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பித்துச் சென்றனர்.
வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்பவம் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். இதன்போது, ​​நீதிமன்றத்தில் பலமுறை விசாரணை நடத்தப்பட்டும் தீர்ப்பு வெளியாகவில்லை.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரில் 2 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர். 5 பேர் வயது முதிர்ந்து உயிரிழந்தனர். இந்த நிலையில் மீதமுள்ள 5 பேரையும் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி நீதிபதி தற்போது விடுவித்தார்.

இதையும் படிங்க : ஆந்திரா, ஹைதராபாத் செல்லும் ரயில்களில் முக்கிய மாற்றம்: தென்னக ரயில்வே

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com