Tripura Rains: திரிபுரா மாநிலத்தில் நேற்று பெய்த கனமழையால் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
Tripura Rains: திரிபுரா மாநிலத்தில் நேற்று பெய்த கனமழையால் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
Published on: April 22, 2025 at 4:50 pm
அகர்தலா, ஏப். 22. 2025: திரிபுரா மாநிலத்தில் நேற்று (ஏப்ரல் 21ஆம் தேதி) அதிகாலை மோசமான வானிலை காரணமாக புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் கிட்டத்தட்ட 445 வீடுகள் சேதமடைந்துள்ளன. மோகன்பூரில் 261 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்பூக்கில், 158 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 26 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டன.
83 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. 49 வீடுகள் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் செபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள சோனமுரா துணைப்பிரிவு வரை ஏற்பட்டுள்ளது. புயலில் 14 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. உதய்பூர் துணைப்பிரிவில் 10 மரங்கள் விழுந்து 27 மின் கம்பங்கள் சேதமடைந்தன. இந்நிலையில், கோமதி மாவட்டத்தின் கார்புக் பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தது.
இதில் நயன் குமார் திரிபுரா (70) மற்றும் ருமதி திரிபுரா (39) ஆகிய இருவர் காயமடைந்தனர். மழையால் 49 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கோமதி, முஹுரி மற்றும் ஃபெனி உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளும் வெள்ள மட்டத்திற்கு கீழ் பாய்கின்றன.
இதையும் படிங்க : அழகு நிலையம் சென்ற பெண்.. நண்பர்களுடன் வந்த கணவர்.. உச்சகட்ட கொடுமை.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com