Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on: October 13, 2025 at 3:29 pm
பெங்களூரு அக் 13, 2025: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து பயணிகள் இருவர் போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (Narcotics Control Bureau) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இலங்கை தலைநகரான கொழும்புவிலிருந்து வந்த ஒரு விமானத்தில் பயணம் செய்த இரு வெளிநாட்டு பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த உணவு பொருட்கள் வைப்பதற்கான டப்பாக்களில் 31 கிலோ உயர்தர கஞ்சா மற்றும் 4 கிலோ சைலோசைபின் காளான் (Psilocybin Mushrooms) எனப்படும் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலைய போலீஸ் நிலையத்தில் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்களுடைய கூட்டாளி ஒருவரும் மற்றொரு விமானத்தில் போதைப் பொருள் கொண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் அதிகாரிகள் மேலும் ஒரு பயணியிடம் சோதனை நடத்தியதில் அந்த நபரிடம் இருந்து 14 கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ சைலோசைபின் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 45 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி ஆகும்.
தற்போது மூன்று பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீதுபோதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரு விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்களிலிருந்து இறங்கும் பயணிகளிடம் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்ணின் மார்பகத்தை தொட்ட டெலிவரி பாய்? ஷாக்கிங் வீடியோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com