சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் 28 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் 28 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Published on: October 4, 2024 at 10:18 pm
Maoists encounter in Chhattisgarh | சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் இன்று (அக்.4, 2024) பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் 28 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்டுகள்- பாதுகாப்பு படையினர் இடையேயான துப்பாக்கிச் சண்டை இன்று மதியம் 1 மணியளவில் நடந்துள்ளது. இது குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், “நாராயண்பூர்-தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள அபுஜ்மரில் உள்ள துல்துலி மற்றும் நெந்தூர் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டில் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது” என்றார்.
மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்)யினர் இந்த கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து ஏகே-47 துப்பாக்கி மற்றும் ஒரு எஸ்எல்ஆர் (சுய ஏற்றுதல் ரைபிள்) உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com