Terrorist attack in Jammu and Kashmir : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 சுற்றுலாப் பயணிகள் காயமுற்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Terrorist attack in Jammu and Kashmir : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 சுற்றுலாப் பயணிகள் காயமுற்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: April 22, 2025 at 5:35 pm
ஸ்ரீநகர், ஏப்.22 2025: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமின் பைசரனில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 12 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், இப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், “இந்தத் தாக்குதலில் என் கணவர் தலையில் பயங்கரவாதிகள் சுட்டனர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்” என்று உயிர் பிழைத்த ஒரு பெண் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருந்தார்.
#WATCH | Firing incident reported in Pahalgam, J&K; Police and Security Forces present on the spot
— ANI (@ANI) April 22, 2025
Details awaited. pic.twitter.com/Ev9HXFjZZ7
இந்த நிலையில், காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் சிலரை உள்ளூர் மக்கள் தங்கள் குதிரைகளில் ஏற்றி வெளியே கொண்டு வந்ததனர்.
5 பேர் மரணம்?
முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, இன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், க்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மெகபூபா முஃப்தி, “பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான கோழைத்தனமான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கதக்கது” என்றார்.
இதையும் படிங்க : ‘துப்பாக்கியை காட்டி குடும்பத்தினரை மிரட்டினார்’: முன்னாள் டி.ஐ.ஜி கொலை வழக்கில் மனைவி வாக்குமூலம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com