Religious conversion: உலகை அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டையில் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக 6 மாநிலங்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Religious conversion: உலகை அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டையில் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக 6 மாநிலங்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on: July 20, 2025 at 11:09 am
டெல்லி, ஜூலை 19 2025: உத்தரப் பிரதேச மாநில காவல்துறை சனிக்கிழமையன்று (ஜூலை 19 2025) ஒரு பெரிய அளவிலான சட்டவிரோத மத மாற்றம் மற்றும் பயங்கரவாத கும்பலை கைது செய்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளின் கூற்றுப்படி, “ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற முறையில் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இதையடுத்து, இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆறு வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதமாற்ற கும்பல் சிக்கியது எப்படி?
2025 மார்ச் மாதம் ஆக்ராவில் 33 மற்றும் 18 வயதுடைய இரண்டு சகோதரிகள் மாயமானார்கள். இதைத்தொடர்ந்து விசாரணை தொடங்கியது. இந்த நிலையில், மாயமான சகோதரிகள் தங்கள் மதத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டதை கண்டுபிடித்தனர்.
இது குறித்து ஆக்ரா காவல் ஆணையர் தீபக் குமார் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில், சகோதரிகள் ‘லவ் ஜிஹாத்’ மற்றும் பயங்கரவாத குழுக்களால் மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது” என்றார்.
10 பேர் கைது
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பத்து பேரில், ஒரு பெண் உட்பட, மூன்று பேர் ராஜஸ்தானிலும், தலா இரண்டு பேர் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலும், தலா ஒருவர் டெல்லி, உத்தரகண்ட் மற்றும் கோவாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க 1,500 இந்து பெண்கள் மதமாற்றம்; யார் இந்த ஜலாலுதீன் பாபா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com