நடிகை கரீனா கபூர் பிங்க் நிற குர்தாவில் ரக்ஷா பந்தன் கொண்டாடியுள்ளார். இந்தக் குர்தாவின் விலை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏ மேரா தில் என பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தவர் கரீனா கபூர். கபூர் குடும்பத்தை சேர்ந்த இவர், திருமணத்துக்கு பின்னர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.இந்த நிலையில் ரன்தீர் கபூர் குடும்பத்தில் நடந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் தனது மகனுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் பிங்க் நிற குர்தா அணிந்து இருந்தார். இந்த குர்தா பெரிதும் பேசப்பட்டது. பலரும் கரீனாவின் டிரெஸிங் மிக அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தனர். சிலர் இந்த குர்தாவின் விலை என்ன எனவும் ஆர்வத்தில் கேள்விகளை அடுக்கியிருந்தனர்.இந்த நிலையில் கரீனா கபூர் அணிந்திருந்த குர்தாவின் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் குர்தா பலரும் நினைப்பது போல் லட்சங்களில் விலை இல்லை. ஆம், இதன் விலை ரூ.30,800 ஆகும். https://www.instagram.com/p/C-2SB0kJSP1 இது தவிர கரீனா கபூர், ஒரு ஜோடி கோல்டன் ஸ்டட் காதணிகள், ஒரு கோல்டன் சப்யாசாச்சி ஸ்லிங் பேக், அழகிய கைக்கடிகாரம் ஆகியவை அணிந்து மிக நேர்த்தியாக காணப்பட்டார். கரீனா கபூர் கடைசியாக க்ரூ (Crew) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. படத்தில் தபு உள்பட பலரும் நடித்திருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது. செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h