ரோபோ சங்கர் மரணம்.. மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்.. தப்பிப்பது எப்படி?

Health: மஞ்சள் காமாலை வெறும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது மட்டுமல்ல; கல்லீரல் பிரச்சினைகள் முதல் தொற்றுகள் வரை பல உள்ளன.

Published on: September 19, 2025 at 8:04 pm

சென்னை, செப்.19, 2025: மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மரணம், திரைப்படத் துறையையும் அவரது ரசிகர்களையும் மிகவும் பாதித்துள்ளது.
அவரது அகால மரணம், மஞ்சள் காமாலையின் தீவிரத்தன்மை குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயின் தாக்கங்கள் குறித்து பார்க்கலாம்.

மஞ்சள் காமாலை என்றால் என்ன?

மஞ்சள் காமாலை முதன்மையாக தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவதன் மூலம் அடையாளம் காணப்படுகிறது. இது இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. இது, நோயை விட அடிப்படை பிரச்சினையின் அறிகுறியாக இருந்தாலும், கல்லீரல், இரத்த அணுக்கள் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமைகிறது.

இதையும் படிங்க: பழுப்பு, கறுப்பு அரிசி வேறுபாடு என்ன? எது உடலுக்கு ஆரோக்கியம்?

மஞ்சள் காமாலையின் பொதுவான அறிகுறிகள்

  • காய்ச்சல், சோர்வு, குமட்டல்
  • மேல் வயிற்று வலி
  • அடர் நிற சிறுநீர்
  • தோல் மஞ்சள் நிறமாகவும், கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாகவும் மாறுதல்

மஞ்சள் காமாலையில் இருந்து பாதுகாப்பது எப்படி?

தடுப்பூசி

மஞ்சள் காமாலைக்கு ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

பாதுகாப்பான உணவு

பாதுகாப்பான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்ள வேண்டும். மேலும், நீரை காய்ச்சி பருக வேண்டும். உணவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவும்.

சுகாதார நடைமுறை

  • உணவுக்கு முன்னும், கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னரும் எப்போதும் சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.
  • தனிப்பட்ட பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்
  • நோய்வாய்ப்பட்ட ஒருவருடன் பாத்திரங்கள், உணவு அல்லது பானங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்,

இதையும் படிங்க: தேநீரில் சீனிக்கு பதிலாக இந்த இனிப்பு.. சுகர் அண்டவே அண்டாது!

குழந்தைகளின் பாதுகாப்பு கேடயம் தாய்ப்பால்.. முதல் தாய்ப்பால் வங்கி.. யார் இந்த மருத்துவர் ஆர்மிடா?
First human milk bank

குழந்தைகளின் பாதுகாப்பு கேடயம் தாய்ப்பால்.. முதல் தாய்ப்பால் வங்கி.. யார் இந்த மருத்துவர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com