குழந்தைங்க டிபன் பாக்ஸ் கன்ஃபார்ம் காலி: தேங்காய்ப்பால் ரசம்!

How to make thengaipaal rasam | குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய தேங்காய்ப்பால் ரசம் வயிற்று புண் மற்றும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும்.

Published on: October 16, 2024 at 1:22 pm

How to make thengaipaal rasam | மிளகு, தக்காளி, மல்லி இலை போன்றவற்றை பயன்படுத்தி பொதுவாக ரசம் செய்வர். அந்த வகையில் தேங்காய்ப்பாலை பயன்படுத்தி ரசம் செய்யும் முறையை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தேங்காய்- 1|2 மூடி
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2
மல்லி இலை- சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 spoon
உப்பு – தேவைக்கேற்ப சேர்க்கவும்
கறிவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு- 1 டீ ஸ்பூன்
பூண்டு – பத்து பல்லு
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

செய்முறை

முதலில் தேங்காய் அரைத்து கெட்டியான தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது முறை எடுத்த தேங்காய் பாலுடன் புளிக்கரைசல், மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை மற்றும் தக்காளி சேர்த்து கைகளால் நன்று நசுக்கி பிசைந்து விட வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சிறிது கருவேப்பிலை, சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அம்மி அல்லது இடி கல்லில் அரைத்து பயன்படுத்தினால் கூடுதல் சுவை தரும். இதனுடன் காரத்திற்காக இரண்டு பச்சை மிளகாயும் சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சை மிளகாய் சேர்ப்பதை தவிர்க்கவும். பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் சிறிது கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய், மற்றும் அரைத்து வைத்த கலவையை இதனுடன் சேர்க்க வேண்டும்.

அடுப்புத் தீயை சிம்மில் வைத்து இவற்றினை நன்கு வதக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் ஏற்கனவே கரைத்து வைத்த இரண்டாவது தேங்காய் பாலினை இதனுடன் சேர்க்க வேண்டும். ரசத்தின் ஓரத்தில் நுரை பொங்கி வந்ததும் இதனுடன் முதலில் எடுத்து வைத்த கெட்டியான தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.

தேங்காய்ப்பால் சேர்த்த பின்னர் ரசத்தை கொதிக்க விடக்கூடாது. தேங்காய்ப்பால் ரசம் நகம் பொறுக்கும் அளவிற்கு சூடானதும் அடுப்பு தீயை ஆப் செய்ய வேண்டும். இப்போது சுவையான ஆரோக்கியமான தேங்காய் பால் ரசம் தயார்.

இதையும் படிங்க : இதோ ஏழே நிமிடத்தில் லெக் பீஸ் ரெடி: செஃப் தாமு ஸ்டைலில் இப்படி பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com