ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தவா ஃபிஷ் ஃப்ரை.. இப்படி ட்ரை பண்ணுங்க!

Food: ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே தவா ஃபிஷ் ஃப்ரை இப்படி செஞ்சு அசத்துங்க.

Published on: March 11, 2026 at 10:00 am

Updated on: March 10, 2026 at 10:56 pm

சென்னை, மார்ச் 11, 2026: மசாலா பிரியாமல் ஹோட்டல் சுவையில் சுவையான தவாஃபில் ஃப்ரை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மீன் -5
மிளகாய் தூள் -1½ டீஸ்பூன்
மல்லித்தூள் -1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம் மசாலா -½ டீஸ்பூன்
சீரகத்தூள் -½ டீஸ்பூன்
மிளகுத்தூள் -½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -2 டீஸ்பூன்
கான்பிளார் -1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் மீன்களின் செதில்களை நீக்கி இரண்டு மூன்று முறை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீன்களின் மீது சிறிது இடைவெளி விட்டு கத்தியை வைத்து கீறி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் இதனுடன் கான்பிளவர், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும். இந்த மசாலா கலவை மீனின் மீது நன்கு படும்படி தடவவும். மசாலா தடவிய மீன்களை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் மீன்களை வைத்து மூடி போட்டு மூன்று நிமிடம் வேக வைக்கவும்.

ஒரு பக்கம் வெந்த பின்னர் மீன்களை மாற்றி போட்டு மூன்று நிமிடம் வேக வைக்கவும். இப்போது மசாலா உதிராமல் ஹோட்டல் சுவையில் சுவையான தவாஃபிஸ்பிரை தயார். இந்த மீனின் மீது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

இதையும் படிங்க: உருளைக்கிழங்கு ரோஸ்ட்னா இப்படி இருக்கணும்.. வீட்ல செஞ்சு அசத்துங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com