Food: இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடக்கூடிய டேஸ்டியான புதினா சட்னி எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Food: இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடக்கூடிய டேஸ்டியான புதினா சட்னி எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Published on: February 19, 2025 at 10:15 am
எளிமையாக செய்யக்கூடிய சுவையான புதினா சட்னி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -4
வர மிளகாய் -4
பூண்டு -6 பல்லு
தக்காளி -2
புதினா இலை -1 கப்
உப்பு – தேவையான அளவு
அரைக்க வேண்டியவை
கடலை பருப்பு -2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -2 டீஸ்பூன்
வெள்ளை எள்ளு -2 டீ ஸ்பூன்
தாளிதம் தயாரிக்க
கடுகு – ½ டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
வர மிளகாய் -1
கருவேப்பிலை -1 கொத்து
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இவை வதங்கிய பின்னர் வேறு பாத்திரத்தில் மாற்றவும். அதே கடாயில் 2 முழு தக்காளி மற்றும் ஒரு கப் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும். தக்காளியை நறுக்கி சேர்த்தால் தண்ணீர் விடும் புதினா சட்னியின் சுவை மாறிவிடும் எனவே முழுமையாக சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கிய பின்னர் வேறு பாத்திரத்தில் மாற்றவும். ஒரு கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் எள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இவை சூடு ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளை எள்ளுக்கு பதிலாக கருப்பு எள்ளும் சேர்த்துக் கொள்ளலாம்.
கருப்பு எள்ளு சேர்ப்பதால் சட்னியின் நிறம் மாறுபடும். பின்னர் இதனுடன் ஏற்கனவே வதக்கி வைத்த பொருள்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தாளிதம் தயாரிக்க ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த புதினா விழுதினை சேர்த்து கலந்து விடவும். சிறிது தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். இரண்டு நிமிடம் வேக வைத்தால் போதுமானது. இப்போது இட்லி தோசைக்கு சூப்பரான காமினேஷன் புதினா சட்னி தயார்.
இதையும் படிங்க : குழந்தைகள் விரும்பும் மோமோஸ்; இப்படி செஞ்சு கொடுங்க; சுவை அள்ளும்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com