Food: குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பீட்சா ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே எளிமையாக இப்படி செய்து அசத்துங்க.
Food: குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பீட்சா ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே எளிமையாக இப்படி செய்து அசத்துங்க.
Published on: April 8, 2025 at 12:41 pm
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பீட்சா வீட்டிலேயே எளிமையாகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீட்சா சாஸ் – தேவையான அளவு
மோசரெல்லா சீஸ் -¼ கப்
சிவப்பு, மஞ்சள் குடைமிளகாய் – சிறிதளவு
ஸ்லைஸ் ஆலிவ்ஸ் – சிறிதளவு
ஸ்வீட் கான்- சிறிதளவு
விருப்பமான காய்கறிகள்- சிறிதளவு
பட்டர் சீட் -1
பீட்சா ஹெர்ப்ஸ் – சிறிதளவு
மாவு தயாரிக்க தேவையானவை
மைதா மாவு -2 கப்
உப்பு -1 டீ ஸ்பூன்
பேக்கிங் பவுடர் -2 டீ ஸ்பூன்
சர்க்கரை -2 டீஸ்பூன்
ரீஃபைண்ட் ஆயில் -2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, ரீபைன்ட் ஆயில் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து திரட்டி எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்கும் பொழுது சிறிது சிறிதாக சேர்த்து திரட்டவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு அல்லாமல் சிறிது அதிகம் தண்ணீர் சேர்த்து மாவை தொட்டால் ஒட்டும் அளவிற்கு தயார் செய்து கொள்ளவும்.
பின்னர் தயார் செய்து வைத்த மாவினை நன்கு பிசைந்து எடுக்க வேண்டும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க சிறிது மைதா மாவினை சேர்த்துக் கொள்ளலாம். மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு பயன்படுத்தலாம். மாவை நன்கு பிசையும் பொழுது கையில் ஒட்டாமல் திரண்டு வரும் அதுவரை நன்கு பிசைந்து கொள்ளவும்.இதுவே சரியான பக்குவம். இதற்கு பத்து முதல் 15 நிமிடம் எடுக்கும்.
மாவு தயார் செய்த பின்னர் மாவு காயாமல் இருக்க அதன் மேல் பரப்பில் சிறிது எண்ணெய் தடவவும். பின்னர் பத்து நிமிடம் மூடி போட்டு ஊற வைக்கவும். பீட்சா ட்ரே அல்லது சாதாரண ஸ்டீல் பிளேட் எடுத்துக் கொள்ளவும். அந்த பிளேட் மீது பட்டர் அல்லது நெய் தடவி அதில் பட்டர் சீட் போடவும். பட்டர் சீட் மீது சிறிது மைதா மாவை தூவி கொள்ளவும்.
தயார் செய்து வைத்த மாவினை பிளேட்டில் வைத்து பிளேட் முழுவதும் பரவும் படி மெதுவாகத் தட்டி செட் செய்யவும். மாவு கையில் ஒட்டுவது போல் இருந்தால் சிறிது மைதா மாவினை தூவிக் கொள்ளவும். மாவை தட்டும் பொழுது நடுவில் சிறிது பள்ளமாக இருப்பது போன்றும் விளிம்பில் உள்ள மாவு தடிமனாக இருப்பது போன்றும் தயார் செய்து கொள்ளவும். பின்னர் பள்ளமாக தயார் செய்த இடத்தில் போர்க் பயன்படுத்தி சிறிது சிறிதாக துளைகள் இட்டுக் கொள்ளவும்.
இதையும் படிங்க : காரசாரமான சுவையில் கடாய் சிக்கன் ; இப்டி டிரை பண்ணி பாருங்க ; சுவை அள்ளும்!
விளிம்பில் உள்ள தடிமனான மாவில் பட்டர் தடவிக் கொள்ளவும். பின்னர் பள்ளமான பகுதியில் தேவையான அளவு பீட்சா சாஸ் தடவிக் கொள்ளவும். பீட்சா சாஸ்க்கு பதிலாக உங்களுக்கு பிடித்தமான சாஸ் பயன்படுத்தலாம். ஒரு அடி கனமான பாத்திரத்தை பத்து நிமிடம் சூடாக்கிய பின்னர் அதன் நடுவில் ஒரு ஸ்டாண்டை வைத்து அதன் மீது தயார் செய்து வைத்த பீட்சா பேஸை வைத்து மூடி போட்டு 12 நிமிடம் வேக வைக்கவும்.
பின்னர் பீட்சாவின் நடுப்பகுதியில் முதலில் மொசரெல்லா சீஸ்யை தேவையான அளவு பரப்பிக் கொள்ளவும். பின்னர் அதன் மீது குடைமிளகாய், சிலைஸ் ஆலிவ்ஸ் , ஸ்வீட் கான் மற்றும் விருப்பமான காய்கறிகள் வைத்து டெக்கரேட் செய்யவும். சமைத்த பன்னீர் மற்றும் சிக்கன் துண்டுகளையும் சேர்க்கலாம். பின்னர் இதை மூடி போட்டு மீடியம் ஃபிளேமில் வைத்து 10 முதல் 12 நிமிடம் வேக வைக்கவும்.
இறுதியாக பீட்சா மீது சீஸ் சேர்த்து மீண்டும் குடைமிளகாய், விருப்பமான காய்கறிகள் மற்றும் ஸ்லைஸ் ஆலிவ்ஸ் வைத்து, பீட்சா ஹெர்ப்ஸ் தூவி மீடியம் பிளேமில் 10 நிமிடம் வேக வைக்கவும். சீஸ் உருகி வந்த பின்னர் பரிமாறவும். இப்போது சுவையான பீட்சா தயார்.
இதையும் படிங்க :பால், முந்திரி போதும்… வீட்டிலேயே குல்பி ஐஸ் ரெடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com