Latest petrol rates in metro cities: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் விலை நிலவரங்களை பார்க்கலாம்.
Latest petrol rates in metro cities: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் விலை நிலவரங்களை பார்க்கலாம்.
Published on: April 8, 2025 at 1:13 pm
புதுடெல்லி, ஏப்.8 2025: மத்திய வருவாய்த் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, செவ்வாய்க்கிழமை (2025 ஏப்ரல் 8) முதல் அமலுக்கு வரும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, மத்திய அரசு திங்கள்கிழமை (ஏப்ரல் 7) இதனை அறிவித்தது. தற்போது, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.19.90 ஆக உள்ளது. இது ரூ.21.90 ஆக உயரும். டீசலுக்கு, வரி லிட்டருக்கு ரூ.15.80 லிருந்து ரூ.17.80 ஆக அதிகரிக்கும்.
இதற்கிடையில், பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் என்றும், நுகர்வோருக்கு சில்லறை எரிபொருள் விலைகள் மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாட்டின் மெட்ரோ ரயில் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பார்க்கலாம்.
பெட்ரோல் விலை
மும்பை ரூ.103.50
புதுடெல்லி ரூ.100.80
பெங்களூரு ரூ.102.98
ஹைதராபாத் ரூ.107.46
சென்னை ரூ.100.80
டீசல் விலை
மும்பை ரூ.90.03
புதுடெல்லி ரூ.87.67
சென்னை ரூ.92.39
பெங்களூரு ரூ.99
ஹைதராபாத் ரூ.95.70
இதையும் படிங்க: டாடா பங்குகள் 5 சதவீதம் வரை வீழ்ச்சி: என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com