Food: வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டாங்களா பத்தே நிமிடத்தில் சுவையான பாஸ்தா பாயாசம் இப்படி பண்ணுங்க.
Food: வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டாங்களா பத்தே நிமிடத்தில் சுவையான பாஸ்தா பாயாசம் இப்படி பண்ணுங்க.
Published on: February 27, 2025 at 12:11 pm
பாஸ்தாவை பயன்படுத்தி எளிமையாக செய்யக்கூடிய சுவையான பாயாசம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்தா -1கப்
உப்பு -½ டீஸ்பூன்
எண்ணெய் -½ டீஸ்பூன்
நெய் -3 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு-15
பாதாம் -10
உலர் திராட்சை -10
காய்த்த பால் – தேவைக்கு ஏற்ப
சர்க்கரை -1½ கப்
அரைக்க வேண்டியவை
தேங்காய் – 3 துண்டு
ஏலக்காய் -2
முந்திரிப் பருப்பு -4
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் இதனுடன் பாஸ்தா சேர்த்து வேக விட வேண்டும். தண்ணீரில் எண்ணெய் சேர்ப்பதால் பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். பாஸ்தா சேர்த்த உடன் நன்கு கலந்து விட வேண்டும். பாஸ்தா வெந்தவுடன் தண்ணீரை வடித்து வேறு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், ஊற வைத்த முந்திரி பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும். தேங்காயை அரைக்கும் பொழுது பின் பகுதியை நீக்கி விட வேண்டும். பின் பகுதியை நீக்கினால் தான் பாயாசம் நிறம் மாறாமல் இருக்கும். ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடாக்கவும். நெய் உருகியதும் அடுப்பு தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து அதில் முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் சேர்த்து வறுக்கவும்.
இதையும் படிங்க: மட்டன் சுவையில் காலிஃபிளவர் கோலா உருண்டை கிரேவி – இப்டி செஞ்சு பாருங்க!
இவை சிறிது நிறம் மாறியதும் இதனுடன் உலர் திராட்சை சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஏற்கனவே வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறி விடவும். பின்னர் இதனுடன் காய்த்த பாலை சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் சுவைக்கு ஏற்றார் போல் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த தேங்காய் முந்திரி விழுதினை சேர்த்து கலந்து விடவும். இதனுடன் ஒரு பின்ச் அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். உப்பு சேர்ப்பதால் சுவை எடுத்துக் கொடுக்கும். இறுதியாக துருவிய முந்திரி மற்றும் பாதாம் தூவி பரிமாறவும் இப்பொழுது சுவையான பாஸ்தா பாயாசம் தயார்.
இதையும் படிங்க: தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கலாம்.. குழந்தைங்க மறுபேச்சு பேசாம சாப்பிடுவாங்க.. சுவையான பன்னீர் மிளகு மசாலா இப்படி பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com