சத்துநிறைந்த கீரைகளில் ஒன்றான முருங்கைக்கீரையை பயன்படுத்தி இந்த குழும்பு செய்து பாருங்கள்.
சத்துநிறைந்த கீரைகளில் ஒன்றான முருங்கைக்கீரையை பயன்படுத்தி இந்த குழும்பு செய்து பாருங்கள்.
Published on: December 14, 2024 at 1:07 pm
Murungai ilai Karuveppilai Kulambu | சுவையான முருங்கைக் கீரை, கருவேப்பிலை குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
முருங்கை கீரை -2 கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் – 25
புளி – சிறிய எலுமிச்சை அளவு
பூண்டு -15 பல்லு
தக்காளி -2
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
மிளகாய் தூள்-1டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
சர்க்கரை -1 டீஸ்பூன்
தாளிதம் தயாரிக்க
நல்லெண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
கடுகு -½ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்
வெந்தயம் -¼ டீஸ்பூன்
கடலை பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
வத்தல் -4
செய்முறை
ஒரு கடாயில் நல்ல எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து முதலில் கருவேப்பிலை சேர்த்து வறுத்து இரண்டு நிமிடத்திற்கு பின்னர் இதனுடன் கழுவி சுத்தம் செய்து உலர்த்திய முருங்கைக் கீரையை சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சேர்க்கவும். கடுகு பொடிந்ததும் அதனுடன் கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், வத்தல் சேர்த்து வறுக்கவும். இதனுடன் தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்த சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பச்சை வாடை நீங்கி பொன்னிறமாக மாறிய பின்னர் இதனுடன் அரைத்த தக்காளி விழுதினை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். மசாலாவின் பச்சை வாடை நீங்க பின்னர் இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த முருங்கை இலையினை இதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
இதனை இரண்டு நிமிடம் கொதித்து வேக விட வேண்டும். இதனுடன் புளி கரைசல் சேர்த்து கலந்து விடவும். இப்போது இதனுடன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வேகவிடவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபடுத்துக் கொள்ளவும். அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும். குழம்பு வெந்து வந்த பின்னர் இறுதியாக ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான முருங்கை இலை குழம்பு தயார். இந்த குழம்பு ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். வெளியூர் செல்ல நினைப்பவர்களுக்கு இது ஒரு சூப்பரான உணவாக அமையும்.
இதையும் படிங்க நாவில் எச்சில் ஊற வைக்கும் சிக்கன் ஃப்ரை ; இப்படி செஞ்சு அசத்துங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com