உடலுக்கு ஆரோக்கியம்.. முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி?

Food: உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் சுவையான முடக்கத்தான் கீரை தோசை இந்த முறையில் செய்து பாருங்க மிகவும் சுவையாக இருக்கும்.

Published on: March 10, 2026 at 9:30 am

Updated on: March 9, 2026 at 11:25 pm

சென்னை, மார்ச் 10, 2026: முடக்கத்தான் கீரையை பயன்படுத்தி உடலுக்கு வலிமை தரும் ஆரோக்கியமான தோசை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

முடக்கத்தான் கீரை – 2 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து -1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம் பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி ஒன்றாக சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் இதனை கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும். மாவு அரைக்கும் போது இரண்டு மூன்று முறை தண்ணீரில் சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.

நன்கு அரைத்த பின்னர் வேறு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அதன் பிறகு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதனை 7 மணிநேரம் புளிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது தோசை தவாவில் ஒரு கரண்டி மாவு ஊற்றி இரண்டு 2 பக்கமும் சிறிது எண்ணெய் ஊற்றி எடுத்தால் ஆரோக்கியமான முடக்கத்தான் கீரை தோசை ரெடி..

இதையும் படிங்க: காரசாரமான கருவாட்டு குழம்பு.. இப்படி ட்ரை பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com