How to make egg gravy | அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான நார்த் இந்தியன் முட்டை கிரேவி இப்படி பண்ணுங்க.
How to make egg gravy | அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான நார்த் இந்தியன் முட்டை கிரேவி இப்படி பண்ணுங்க.
Published on: December 16, 2024 at 11:27 am
How to make egg gravy | மிகவும் சுவையான ஸ்பைசியான நார்த் இந்தியன் முட்டை கிரேவி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை -6
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை -1
பட்டை -1 துண்டு
ஏலக்காய்-2
கிராம்பு -2
சீரகம் -1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
சீரகத்தூள் -1 டீஸ்பூன்
தனியாத்தூள் -2 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -4
கரம் மசாலா -1 டீஸ்பூன்
சர்க்கரை -1 டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி -½ டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
அரைக்க வேண்டியவை
முந்திரிப் பருப்பு -20
தக்காளி -4
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் ஊறவைத்த முந்திரி பருப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு மற்றும் சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கிய பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும். இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த தக்காளி விழுதினை சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும். அரைத்த மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து அலசி இதனுடன் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும். பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள்,சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். இதனுடன் கரம் மசாலா, சர்க்கரை மற்றும் நான்கு பச்சை மிளகாய் கீறி சேர்த்துக் கொள்ளவும். கடாயை மூடி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். ஐந்து நிமிடத்திற்கு பின்னர் கஸ்தூரி மேத்தி கசக்கி சேர்த்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளலாம். கிரேவியில் உள்ள பிரியாணி இலையை வெளியே எடுத்து விடவும்.
முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி பின்னர் கிரேவியில் மெதுவாக சேர்க்க வேண்டும். முட்டை ஊற்றிய பின்னர் கரண்டியை விட்டு கிளறி விடக்கூடாது. உடைத்து ஊற்றிய முட்டை மீது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். முட்டையை அவித்தும் சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பு தீயை சிம்மில் வைத்து கடாயை மூடி பத்து நிமிடம் வேக வைத்து இறக்கவும். இப்போது சுவையான நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டை கிரேவி தயார். இந்த முட்டை கிரேவி சாதம், சப்பாத்தி, தோசை உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : காரசாரமான சுவையில் கடாய் சிக்கன் ; இப்டி டிரை பண்ணி பாருங்க ; சுவை அள்ளும்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com