Food: இந்த சம்மரில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பனானா கேக் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். பேக்கரி சுவையில் பனானா கேக் இப்படி ட்ரை பண்ணுங்க.
Food: இந்த சம்மரில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பனானா கேக் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். பேக்கரி சுவையில் பனானா கேக் இப்படி ட்ரை பண்ணுங்க.
Published on: May 5, 2025 at 12:24 pm
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனானா கேக் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு -1½ கப்
பேக்கிங் பவுடர் -1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -1 டீஸ்பூன்
உப்பு -1 டீ ஸ்பூன்
அரைக்க வேண்டியவை
வாழைப்பழம் -3
நாட்டு சக்கரை -¼ கப்
சர்க்கரை -½ கப்
முட்டை -2
உருகிய பட்டர்-½ கப்
பால் -½ கப்
வெண்ணிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்ந்து கலந்து கொள்ளவும். மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு எடுத்துக் கொள்ளலாம். இந்த மாவினை ஒரு ஜல்லடை மூலம் சலித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வாழைப்பழத்தின் தொழிலை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த வாழைப்பழ விழுதினை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதையும் படிங்க : ஹோட்டல் ஸ்டைலில் வெஜ் மஞ்சூரியன்.. இப்படி செய்து அசத்துங்க!
பின்னர் அதே மிக்ஸி ஜாரில் நாட்டுச்சர்க்கரை, சர்க்கரை, முட்டை, உருக்கிய பட்டர், காய்த்து ஆற வைத்த பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை ஏற்கனவே கலந்து வைத்த மாவுடன் சேர்த்து கட்டி விழாமல் கலந்து விடவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பட்டர் சீட் போட்டு அதன் மீது நெய் தடவி அதில் தயார் செய்து வைத்த கலவையை சேர்த்து செட் செய்யவும்.
ஒரு அகலமான குக்கரில் ஒரு கப் அளவு உப்பு சேர்த்து அதன் நடுவில் ஒரு சிறிய தட்டு அல்லது ஸ்டாண்ட் வைக்க வேண்டும். குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் ரப்பர் மற்றும் விசிலை எடுத்த பின்னர் மூடி போட்டு ஹை ஃபிளேமில் 10 நிமிடம் பிரீஹீட் செய்து கொள்ளவும்.
பின்னர் குக்கரில் தயார் செய்து வைத்த மாவினை வைத்து லோ பிளேமில் 25 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பேக் செய்யவும். கேக்யை முழுமையாக வேக வைக்கவும். இப்போது சுவையான வாழைப்பழம் கேக் தயார். இதை கட் செய்து அனைவருக்கும் பரிமாறி மகிழவும்.
இதையும் படிங்க : Bhel Puri: ரோட்டு கடை பேல் பூரி வீட்டிலேய செய்யலாம்.. டேஸ்ட் கொஞ்சம் கூட மாறாது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com