How to make badusha | சுவையான பாதுஷா வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று தெரியுமா?
How to make badusha | சுவையான பாதுஷா வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று தெரியுமா?
Published on: October 30, 2024 at 10:56 am
How to make badusha | அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று பாதுஷா. இதை வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
மைதா மாவு – 2 கப்
உப்பு -1 டீஸ்பூன்
நெய் – 1/2 கப்
பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 2 கப்
குங்குமப்பூ – சிறிதளவு
ஏலக்காய் -2
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, நெய் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். மாவை கலந்து விட்ட பின்னர் கைகளால் அழுத்தும் பொழுது கொழுக்கட்டை போன்று பிடி வர வேண்டும். உதிர்த்தும் பொழுது மீண்டும் உதிர வேண்டும். இது சரியான பக்குவம் ஆகும். ஒருவேளை பிடி வரவில்லை என்றால் மீண்டும் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவை 2 மணி நேரம் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து ஊற விட வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா அளந்த அதே கப்பில் இரண்டு கப் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும். இதனுடன் சிறிது குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் சேர்த்து பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
இரண்டு விரல்களால் பாகை தொட்டு பார்க்கும் பொழுது ஒரு கம்பி வந்தால் சரியான பதமாகும். இரண்டு மணி நேரம் ஊறி தயார் நிலையில் இருக்கும் மாவை மீண்டும் பிசைந்து விடாமல் உடனடியாக பாதுஷா செய்ய தொடங்க வேண்டும். மாவினை சப்பாத்தி உருண்டை போல் எடுத்து பாதுஷா வடிவில் தட்டையாக ஆக்கி நடுவில் துளையிட்டு தயார் செய்ய வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் தயார் செய்து வைத்த பாதுஷா மாவுகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பாதுஷாவை சேர்த்த பிறகு அடுப்பை மீடியம் மற்றும் லோ பிளேமில் மாறி மாறி வைத்து பாதுஷா இரண்டு பக்கமும் வேகும்படி நிதானமாக பொறித்து எடுக்க வேண்டும்.
பின்னர் பாதுஷா சூடாக இருக்கும் பொழுதே சர்க்கரைப்பாகினில் சேர்க்க வேண்டும். பாதுஷா சர்க்கரை பாகினில் 10 நிமிடம் ஊறிய பின்னர் வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறலாம். இப்பொழுது சுவையான பாதுஷா தயார்.
இதையும் படிங்க : டீ, காபிக்கு செம்ம ஸ்நாக்ஸ்; வீட்டிலேயே தட்டை செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com