Lifestyle | பெண்கள் சிறுநீர் கசிவு பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி?
Lifestyle | பெண்கள் சிறுநீர் கசிவு பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி?
Published on: September 18, 2024 at 1:29 pm
Lifestyle | இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் சிறுநீர் கசிவு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். சிறுநீர் கசிவு பிரச்சனை என்பது இன்றைய காலகட்டத்தில் பொதுவாக காணப்படுகிறது. இநதப் பிரச்சனை குழந்தை பிறப்புக்கு பின்னர் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகின்றது. இந்தப் பிரச்சனை காரணமாக சில பெண்கள் சிரிக்கும் போதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கான தீர்வுகளை மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் யூ-ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அதில், பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சிறுநீர் பிரச்சனைகள் அதாவது அதிகமாக இருமும் பொழுதும் சிரிக்கும் பொழுதும் திடீரென தும்மல் எடுக்கும் போதும் பெண்களுக்கு சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படுகிறது. இதேபோன்று வயது முதிர்வு காரணத்தினாலும், நார்மல் டெலிவரி ஆன பெண்களுக்கும், எடை அதிகமாக உள்ள பெண்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிறுநீர் கசிவு பிரச்சினையில் இருந்து விடுபட சில முக்கிய தகவல்களை இப்போது பார்க்கலாம். சிறுநீர் கசிவு பிரச்சனையில் இருந்து விடுபட முதலில் நோயாளியின் உடல் எடையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். உடல் எடையை குறைப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையும் குறையும்.
பெல்வி ஃப்ளோர் மசில் ட்ரெய்னிங் என்பது டெலிவரியின் போது தசைகள் சேதம் அடைவதை தடுப்பதற்கான உடற்பயிற்சி ஆகும். இந்த உடற்பயிற்சியினை சிறுநீர் கசிவு வந்த பின்னர் செய்வதை விட பிரசவ காலத்தில் இருந்தே செய்வது அவசியம். பெல்விக் ப்ளோர் மசில் ட்ரெயினிங் என்பது யூரின் போகும் இடம், பிறப்புறுப்பு மற்றும் மோஷன் போகும் இடத்தினை ஒன்று முதல் ஐந்து கவுண்டிங் வரை உள்பக்கமாக இழுத்து பின் விட வேண்டும்.
இந்த சமயம் மூச்சு அடக்க தேவையில்லை. ஒருமுறை இந்த எக்சர்சைஸ் செய்து முடித்து அடுத்து தொடரும் பொழுது மூன்று நிமிட இடைவெளி விட வேண்டும். நாக் முறையில் சிறுநீர் கசிவு உள்ளவர்கள் திடீரென ஏற்படும் தும்மல் இருமலின் போது பெல்விக் ஃப்ளோர் மசில் எக்ஸ்சசைஸ் முறைப்படி உள் இழுத்துக் கொள்ளும் பொழுது சிறுநீர் கசிவு வராமல் தடுக்கலாம்.
வயது முதிர்வின் காரணமாக அதிக சிறுநீர் கசிவு இருக்கும் நோயாளிகளுக்கு இந்த எக்சர்சைஸ் முறை பலனளிப்பது இல்லை. எனவே இதை குணப்படுத்த அறுவை சிகிச்சை முறைக்கு செல்லலாம். அறுவை சிகிச்சையில் லேப்ரோஸ்கோபி, ரோபோடிக் என பலவிதமான அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவர் நோயாளியினை நன்கு பரிசோதித்த பின்னர் நோயாளிக்கு ஏற்ற அறுவை சிகிச்சை முறையை தேர்ந்தெடுப்பர்.
பெண்கள் இந்த சிறுநீர் கசிவு பிரச்சனையை கஷ்டமாகவும், அவமானமாகவும் நினைக்காமல் தகுந்த மருத்துவரை அணுகி இந்தப் பிரச்சனையில் இருந்து எளிதாக விடுபடலாம் என டாக்டர் T. ஸ்ரீகலா பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கீரை முதல் பூண்டு வரை.. நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த 5 உணவுகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com