Food | இந்திய உணவுகளில் தக்காளி ரசத்துக்கு தனி மதிப்பு உண்டு. அந்த வகையில், செஃப் தாமு ஸ்டைலில் தக்காளி ரசம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
Food | இந்திய உணவுகளில் தக்காளி ரசத்துக்கு தனி மதிப்பு உண்டு. அந்த வகையில், செஃப் தாமு ஸ்டைலில் தக்காளி ரசம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
Published on: September 11, 2024 at 12:08 pm
Food | செஃப் தாமு ஸ்டைலில் மிகவும் எளிதில் செய்யக்கூடிய தக்காளி ரசம் எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
தக்காளி -3
பூண்டு -8 பல்லு
மிளகு -2 டீஸ்பூன்
சீரகம் -2 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் -2 டீஸ்பூன்
வரமிளகாய் -2
தண்ணீர் -2 கிளாஸ்
கடுகு- 1 டீஸ்பூன்
கருவேப்பிலை
நல்லெண்ணெய்- 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் தக்காளியை சேர்த்து தக்காளியை கைகளால் நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். தக்காளி தோளினை நீக்கிவிட வேண்டும். பின்னர் பூண்டு, சீரகம், மிளகு மற்றும் கருவேப்பிலையை தனித்தனியே இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் தயார் செய்து வைத்த தக்காளி சாறினை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து உப்பினை சரிபார்த்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் இடித்து வைத்த பூண்டு, சீரகம், மிளகு மற்றும் இடித்து வைத்த கருவேப்பிலையினை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து கிளறி விட வேண்டும்.
ரசம் அதிகம் கொதித்தால் கசப்பு தன்மை ஏற்படும் எனவே ரசம் நுரை பொங்கி ஒரு கொதி வந்தவுடன் அடுப்பினை ஆப் செய்ய வேண்டும். பின்னர் செய்து வைத்த ரசத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும். இப்போது செஃப் தாமு ஸ்டைலில் சுவையான தக்காளி ரசம் தயார்.
இதையும் படிங்க : பார்த்தாலே குடிக்கணும் போல இருக்கே: வெங்கடேஷ் பட் ஸ்டைலில் இளநீர் பாயாசம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com