morning walk | ஒவ்வொருவருக்கும் அதிகாலை உடற்பயிற்சிகளில் வாக்கிங் முக்கியமானது. பெரும்பாலும் சிறியவர்களை விட பெரியவர்கள் வாக்கின் செல்ல விரும்புகின்றனர்.
morning walk | ஒவ்வொருவருக்கும் அதிகாலை உடற்பயிற்சிகளில் வாக்கிங் முக்கியமானது. பெரும்பாலும் சிறியவர்களை விட பெரியவர்கள் வாக்கின் செல்ல விரும்புகின்றனர்.
Published on: August 31, 2024 at 4:27 pm
morning walk | ஒவ்வொருவருக்கும் அதிகாலை உடற்பயிற்சிகளில் வாக்கிங் முக்கியமானது. பெரும்பாலும் சிறியவர்களை விட பெரியவர்கள் வாக்கின் செல்ல விரும்புகின்றனர்.
உடல் எடையை குறைக்கவும், நோயிலிருந்து விடுபட்டு உடலினை ஆரோக்கியமாக வைப்பதற்கும் நடைப்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.வாக்கிங் செல்வதிலும் சில விதிமுறைகள் உள்ளன அவற்றினை பற்றி இப்போது பார்க்கலாம். வாக்கிங் செல்ல தொடங்கும் பொழுது முதல் 10 நிமிடங்கள் மெதுவான நடை பயிற்சி செய்ய வேண்டும்.
பின்னர் அரைமணி நேரம் சாதாரணமான நடை பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். இறுதி ஐந்து நிமிடங்கள் மீண்டும் மெதுவான நடைபயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். அதாவது இறுதி ஐந்து நிமிடங்கள் ஆமை போல் மிகவும் மெதுவாக நடக்க வேண்டும். இந்த நடை பயிற்சி சராசரியான சுவாசத்திற்கு வழிவகுக்கிறது.
வாக்கிங் செய்து முடித்த பின்னர் தரையில் யோகா மேட் அல்லது பெட்ஷீட் விரித்து சாவாசனம் செய்ய வேண்டும். ஆசனம் முடித்து எழும்போது இடது பக்கம் திரும்பி எழும்பிட வேண்டும். மேலும் வாக்கிங் செல்லும் முன் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து செல்வது மிகவும் நல்லது. வெறும் வயிற்றிலோ அல்லது அதிக அளவு உணவு உண்ட பின்னரோ நடைப்பயிற்சியில் ஈடுபட கூடாது.
மேலும் நேர்மறை எண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியான மனநிலையில் நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும். நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பாதணிகளை சரியாக தேர்வு செய்வது மிகவும் அவசியம்.
மகிழ்ச்சியான நடை பயிற்சி ஆரோக்கியமான உடல் நலத்திற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :மாதவிடாய் காலத்தில் செக்ஸ் கொள்ளலாமா? நன்மை, தீமை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com